அன்புள்ள அக்கா

எனது தோழியை விடவும் எனக்கு நெருக்கமானவள் அவள் எனது வீட்டின் அருகினிலே அவளுடைய மனையும் அமைந்திருந்தது. இது நாங்கள் எதிர்பார்த்து இருந்தது இல்லை. பிறப்பின் விதி இங்கு இருந்து எங்களை பயணிக்க வைக்கிறது. எங்கள் வீட்டில் நான் ஒருத்தியே இன்னிமொரு பிள்ளைப் பெற்றுக் கொண்டால் பாசம் பகிர வேண்டியிருக்குமென்று எனது தாய் தந்தையர் எனக்கு தம்பியோ, தங்கையோ வேண்டாம் என்று என்னிடம் கேட்காமலயே முடிவு செய்துக் கொண்டனர். எனக்கு சில வேளைகளில் ஒருவர் உடனிருந்திருந்தால் நன்றாயிருக்கும் மென்று தோன்றும். என்னுடைய பத்தாவது வயதில் நான் எனது அம்மாவிடம் கேட்டேன் ஏன்மா இனி எனக்கு தம்பி பாப்பா பெத்து தரமாட்டியா என்று அம்மா சிரித்துக் கொண்டே உங்க அப்பாவிடம் கேள் என்றாள். நான் அம்மாவிடம் சொன்னேன் நீ தான பெற்று எடுக்க போகிறாய், நான் ஏன் அப்பாவிடம் கேட்க வேண்டுமென்று! அம்மா அதன் பின் என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை பதில் கூறாமல் எனது தலையை அவள் மடியில் சாய்த்துக் கொண்டு எனக்கு பேன் பார்க்க ஆரம்பித்தாள். நானும் அவளை தொந்தரவு செய்யாமல் அன்று தூங்கிவிட்டேன். அப்பாவிடம் எனக்கு கேட்க தோன்றவில்லை ஏனோ! ஆ...