அன்புள்ள அக்கா

 எனது தோழியை விடவும் எனக்கு நெருக்கமானவள் அவள் எனது வீட்டின் அருகினிலே அவளுடைய மனையும் அமைந்திருந்தது. இது நாங்கள் எதிர்பார்த்து இருந்தது இல்லை. பிறப்பின் விதி இங்கு இருந்து எங்களை பயணிக்க வைக்கிறது. எங்கள் வீட்டில் நான் ஒருத்தியே இன்னிமொரு பிள்ளைப் பெற்றுக் கொண்டால் பாசம் பகிர வேண்டியிருக்குமென்று எனது தாய் தந்தையர் எனக்கு தம்பியோ, தங்கையோ வேண்டாம் என்று என்னிடம் கேட்காமலயே முடிவு செய்துக் கொண்டனர். 


எனக்கு சில வேளைகளில் ஒருவர் உடனிருந்திருந்தால் நன்றாயிருக்கும் மென்று தோன்றும். என்னுடைய பத்தாவது வயதில் நான் எனது அம்மாவிடம் கேட்டேன் ஏன்மா இனி எனக்கு தம்பி பாப்பா பெத்து தரமாட்டியா என்று அம்மா சிரித்துக் கொண்டே உங்க அப்பாவிடம் கேள் என்றாள். 

நான் அம்மாவிடம் சொன்னேன் நீ தான பெற்று எடுக்க போகிறாய், நான் ஏன் அப்பாவிடம் கேட்க வேண்டுமென்று! அம்மா அதன் பின் என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை பதில் கூறாமல் எனது தலையை அவள் மடியில் சாய்த்துக் கொண்டு எனக்கு பேன் பார்க்க ஆரம்பித்தாள். 

நானும் அவளை தொந்தரவு செய்யாமல் அன்று தூங்கிவிட்டேன். அப்பாவிடம் எனக்கு கேட்க தோன்றவில்லை ஏனோ! ஆனால் அப்பா நான் கேட்டு எதுவும் வாங்கி கொடுக்காமல் இருக்கவில்லை. என்னுடைய அறிவு முதிர்ச்சி பெறாத அந்த வயதில் அப்பாவின் பங்கை அறியாமல் இருந்திருக்கிறேன் என்று எண்ணத் தோன்றுகிறது. 

ஆனால் இரவு வேளைகளைத் தவிர பெரும்பாலான நேரங்களில் நானும் பக்கத்து வீட்டு அக்கா ரேக்காவும் ஒன்றாகவே சுற்றுவோம். திருவிழா அல்லது தீபாவளி போன்ற நாட்களில் வீட்டிற்கு விருந்தினர் வருவதினால் நாங்கள் அன்றைய தினங்கள் சந்திக்க முயற்சிப்பதும் இல்லை. 

பெரியம்மா பசங்க அத்தை பசங்க கூட நாள் போவதே தெரியாது.  வயதும் நீ வாக்கு செலுத்த தயார் என்ற மகிழ்ச்சி மணி ஒலித்து பெரியவள் என்ற அந்தஸ்த்து கொடுத்திருந்தது. ஆனால் என்னை விட ஐந்து வயது பெரியவளான அவளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. 

அவளுக்கு திருமணத்தில் மிகவும் ஆர்வம் அதிகமானவளாகவே இருந்தாள். என்னிடம் அடிக்கடி திருமண வாழ்கை பற்றி அவளுடைய பல கனவுகளைக் கூறி என்னையும் ஆச்சர்யப் பட செய்வாள். கணவனுடன் குதிரை, ஒட்டக பயணம். காடுகளுக்குள் தனிமை பனி படர்ந்த பிரதேசத்தில் விடுமுறை நாட்கள் என அவளுடைய கற்பனைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே தான் இருந்தது. 

அவளுக்கு கல்லூரி காதலும் உண்டு அதற்கு முழு நேர தூதுவள் நான் தான் என்பதில் எனக்கு வருத்தம் தான், அந்த அண்ணன் விபத்து ஒன்றில் இறந்து விட்டான் அவள் சில வருடங்கள் கொஞ்சம் பைத்தியம் பிடித்தவள் போலவே தான் இருந்தாள். என்னிடம் கூட சரியாக பேசியது இல்லை. 

அவள் திருமத்திற்கு இப்பொழுது ஒத்துக் கொள்ள வைக்க அவளின் அம்மா என்னை தினமும் அழைத்து அவளிடம் பேசு, பேசு என்று கூற நானும் அவளிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் அவளுடன் அமைதியாக தான் இருப்பேன் அவளை நான் சமாதானம் செய்ய முயல்வது இல்லை. சொல்லப் போனால் சமாதானம் செய்ய என்னிடம் வார்த்தைகளும் இல்லை. எனக்கு தெரிந்தது எல்லாம் சிறியதாய் ஒரு அரவணைப்பு மாத்திரமே அவள் அதிலேயே புரிந்து கொள்வாள்.

திருமண வேலைகள் நன்றாக நடந்துக் கொண்டிருந்தன அந்த நாட்களில் கூட அவனை நினைத்து அழுதது உண்டு. 

இப்போது பார்த்திருக்கும் மாப்பிள்ளை வட மாநிலத்தில் வேலை செய்கிறார். சிவில் இன்ஜினியரிங் முடித்தவர் திருமணம் முடிந்த கையோடு புதிதாக தொழில் தொடங்கவிருப்பதாக கூறினாள். 

சென்னையில் தான் நாங்கள் எங்கள் புதுமண வாழ்வை ஆரம்பிக்க இருக்கிறோம் என்றாள் எனக்கு சந்தோசமாக இருந்தது. நான் அவளிடம் சொன்னேன் அப்போ நான் அடிக்கடி சென்னை வருவேன் என்ன மெரினா பீச்சுக்கு கூட்டிட்டு போகனும் என்றேன் அவள் ஓ அதுக்கென்ன உன்ன கூட்டிட்டி போறாத தவிற வேற என்னடி எனக்கு முக்கியம் என்று திருமணத்திற்கு வாங்கிய நகைகளைக் காட்டினாள் எல்லாம் எங்க அப்பா எனக்காக பாத்து பாத்து வாங்குனது.

அவரோட மொத்த சம்பாத்தியத்தையும் எனக்காக சேர்த்து வைத்து மொத்தமா கொடுத்துட்டாரு என்றாள். 

அனைத்து அப்பாக்களும் செய்யும் ஒன்று தானே என்று தான் தோன்றியது எனது தோழியர்கள் பலர் இதை என்னிடம் சொல்ல நான் கேள்விபட்டிருக்கவே நான் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

கணவனுடன் தானிருக்கப் போகும் நெருக்கங்கள் பலவற்றை என்னிடம் கூறி சிரித்துக் கொண்டிருந்தாள் எனக்கு அவள் என்னை விட்டு தொலைவில் செல்லவிருக்கிறாள் என்பது மனதை புரட்டிக் கொண்டே இருந்தது அவள் முகத்தில் அப்படி ஒன்றும் தெரியவில்லை அவள் அவளது இல்லற வாழ்கையின் கனவில் மிதந்துக் கொண்டிருந்தாள்.

அவள் எப்படி அவள் ஆசைகளை என்னிடம் கூறிக்கொண்டே இருக்கிறாளோ அப்படியே தான் நானும் அவளிடம், அவள் சென்ற பிறகு எற்பாடும் தனிமை என்னை இப்போதே அனுபவிக்கத் துவங்கியது.

எங்கள் ஊரில் மிகவும் பேசப்பட்ட திருமணம் அவளுடையது தான் ஏனென்றால் நடுத்தர குடும்பம் என்றாலும் தனது மகளுக்காக அவர் அப்பா பல ஏற்பாடுகளை செய்திருந்தார். 

அதுமட்டுமில்லாமல் அவர் பிரபல திரைப்பட பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்ததால் பல சினிமா நாயகர்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர் என்பதும் தான். திருமணத்திற்கு வந்தவர்களை விட நாயகர்களைப் பார்க்க அக்கம் பக்கத்து ஊர் எல்லாம் கூடியிருந்தது. 

திருமணம் முடிந்த கையோடு என்றனவே அவர்கள் பார்த்து வைத்திருந்த சென்னை வீட்டிற்கு அவர்கள் குடும்பத்தினர் உடன் விமானத்தில் புறப்பட்டனர். என்னையும் அழைத்தார்கள் ஏனோ எனக்கு அவளுடன் அன்றைய பயணம் விரும்பவில்லை மனம். 

அவள் நானறியா ஆணுடன் கலப்பாய் இருக்க அவர்கள் ஊடே நான் எதற்க்கு என்பதாக தான் தோன்றியது. அது புரிந்த அவளும் என்னை கட்டாயப் படுத்தவில்லை.

அவள் முதலிரவு பற்றி பல ஆசைகளை வைத்திருந்தாள், முதலிரவு மட்டுமல்ல. முதலிரவில் இருந்து ஒவ்வொரு இரவும் தான். அவள் கூறும் போது எனக்கு கொஞ்சம் வியப்பாக இருக்கும். அத்தனை மோகப் பிரியை அவள்.

முத்ததால் இரவுகள் முழுவதையும் கடத்த முடியுமா என்றால் எனக்கு தெரியவில்லை. ஆனால் அவள் முதலிரவு திட்டமே முத்தம் மாத்திரம் தான். எனது கணவனுக்கு நான் நினைத்த உடன் கிடைக்கும் கொய்யா என்று தோன்றிட கூடாது. என்று விளையாட்டாக கூறுவாள்.

எனது முந்தானையை தவிர அவன் வேறு எதையும் கைபற்ற நான் விட மாட்டேன் என்பாள், எனது காதருகே அவன் கெஞ்சல் கேட்க வேண்டும். என்பாதங்களை அவன் வருட வேண்டும். அவன் கைகள் எனது இடையை நிறப்ப வேண்டுமென்ற பொல்லாத ஆசைகளை அடுக்கிக் கொண்டே இருப்பது தான் அவளுக்கு முழு நேர பொழுது போக்கு.

அவள் சொல்லும்போதே விரைவில் நாமும் திருமணம் செய்து அவளை போல சந்தோசமாக இருக்க வேண்டுமென்று தோன்றும். 

இரண்டாவது நாள் காலையில் அவன் என்னை தேடி வரவேண்டும் சமையல் அறைக்கு. அங்கிருந்து சில செய்கைகளை செய்து தனிமையில் எனை வரவழைக்க அவன் போராட வேண்டும். அவனை கொஞ்சம் ஆசுவாசப் படுத்த நானும் செல்ல வேண்டும். அவன் கோரப் பிடியில் இருந்து நழுவி அவனை உட்கார வைத்து அவன் மடி மீது அமர்ந்து அவன் மீசையோடு விளையாட வேண்டும். 

இப்படி பத்து வருடங்கள் ஆனாலும் முடியாத அளவு அவள் ஆசைகள்.

அவள் சென்னை சென்ற அடுத்த நாள் நான் அவளுடைய அலைபேசிக்கு அழைத்தேன். என்னால் அத்தனை பொறுமையாக இருக்க முடியவில்லை வீட்டில் எனது தனிமையை முழுவதும் பூர்த்தி செய்வது அவள் தான் இப்பொது அவள் இல்லை இருந்தாலும் பேச முடியும் தொந்தரவு செய்ய கூடாது என்ற ஒரு எண்ணமும் உண்டு

முதலிரவு என்ன நடந்தது என்பதை கேட்க எனக்கு ஆவல் அதிகமாக இருந்தது. ஆனால் அன்று அவள் என்னுடைய அழைப்பை ஏற்கவில்லை. சரி அவள் என்னை மறந்திருக்கலாம். கணவனோடு சந்தோசமாக இருக்கட்டும் என்று எனக்கும் அதன் பின் அவளை தொந்தரவு செய்ய வேண்டாமென்று தான் தோன்றியது. 

எனது அப்பா என்னிடம் கேட்டார் உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை வேண்டுமென்று. நான் சற்றும் யோசிக்காமல் அப்பா இப்பவே பாக்கப் போறீங்களா. நான் சின்னப் பொண்ணுப் பா என்றேன்.

அப்பா சிரித்துக் கொண்டே என் கைகளைப் பிடித்துக் கொண்டு நல்லா படி என்று சொல்லிவிட்டு அப்பா டவுனுக்கு போறேன் வறியா என்றார். எனக்கு அன்று எங்கும் செல்ல விருப்பமில்லை. இருந்தும் அப்பாவின் அழைப்பை மறுக்க முடியவில்லை.

சரி என்று அப்பாவுடன் சென்றேன். அங்கு எனக்கு பிடித்த சாக்லேட், ஐஸ்கிரீம், எல்லாம் வாங்கிக்கொண்டிருந்தோம். அப்பாவின் நண்பர் குமார் மாமா அங்கு நின்றிருந்தார். அவர் என்னை பார்த்ததும் தங்கம் எப்படி இருக்க நல்லா வளந்துட்ட இப்போ தான் பள்ளி கூடத்தில சேர்க்க உங்கப்பன் கூட்டிட்டு போன மாதிரி இருந்து என்றார். 

நானும் மாமா நீங்க கூடத் தான் வளந்துட்டீங்க முன்னால சைக்கிள்ள இந்த தொப்பையை வைக்கமுடியாம இருந்தீங்க இப்போ பைக்ல நல்லா கம்பர்டஃபுலா தொப்பையை வச்சிட்டு போறீங்க என்றேன். அவர் எப்போதும் போல உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா என்று அப்பாவிடம் பேசிக் கொண்டிடுந்தார்.

குமார் மாமாவின் மகன் அரவிந்த் ஓரக் கண்ணாலே பார்த்துக் கொண்டிருந்தான் சிறுவயதில் என்னுடன் பேசியிருக்கிறான். ஆனால் என்னமோ அன்று பேசவில்லை விலகி நின்று என்னைப் பார்ப்பதும் தலையை திருப்புவதுமாக நின்றான். நானும் எதுவும் கண்டுக் கொள்ளவில்லை.

குமார் மாமா அவனை அழைத்தார் என்னாடா ஒதுங்கி ஒதுங்கி நிக்கிற இங்க வா என்று அழைத்தார். அவன் ஏதோ அலட்டிக் கொண்டு என்னை தெரியாதவன் போல் வந்தான் நானும் கண்டு கொள்ளவில்லை. 

குமார் மாமா சொன்னார் டேய் என்ன வெட்கப் பட்டு நிக்கிற உன்னோட முறைப் பொண்ணு தான் தயிரியமா பேசு என்றார் அவன் ஈ என்று இழித்தான் நான் அப்பாவிடம் வீட்டுக்கு போகலாம் என்றேன் குமார் மாமா அரவிந்தை திட்டினார் ஏண்டா அந்த சின்ன புள்ளைய பயமுறுத்துறன்னு. 

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை நான் அப்பாவின் கைகளை பிடித்துக் கொண்டு நின்றேன். அதன் பின் வீட்டிற்கு வரும் போது அப்பா பைக்கை என்னிடம் கொடுத்தார் நீ ஓட்டு என்று, நான் அப்பாவை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு வீடு வந்தோம்.

அம்மா வெளியில் நின்று எதிர் வீட்டு ஆன்டி கூட பேசிட்டு நின்னாங்க அப்பாவ பார்த்தும் அவசரம் அவசரமா உள்ள போய்ட்டாங்க என்னால சிரிப்ப அடக்கிக்கவே முடியல அம்மாவோட ஆக்சன பார்த்து.

அம்மா இன்னைக்கு அப்பாகிட்ட செமயா வாங்கிக்கப் போரான்னு மட்டும் நினச்சிக் கிட்டேன் ஏன்னா அப்பாவுக்கு ஊர் கதை பேசுவது எல்லாம் பிடிக்காது. 

அதுவும் இல்லாமல் அம்மாவும் சும்மா இருக்க மாட்டாங்க. அவங்க வீட்டில இப்படி அப்படின்னு யாராவது சொல்லுறத கேட்டுடு பேசுறது அப்பாவுக்கு பிடிக்காது. 

“இப்படி தான் ஒரு நேரம் பக்கத்து தெரிவுல ஒரு அக்கா குழந்தை பிறக்கும் போது அந்த அக்காவுக்கும் குழந்தைக்கும் ஏதோ பிரச்சனை ஐசியு ல வச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க அப்பாவும் கொஞ்சம் பதறிட்டாங்கா ஐயோ பச்ச குழந்தைலா சரி அப்படில்லா ஒன்னும் இருக்காது விடுங்க குழந்தையும் தாயும் நல்லாயிருப்பாங்க என்று சொல்லிட்டு வெகியில போனாரு, போனவரு கொஞ்சம் நேரத்தில பைக்கை வேகமா ஓட்டிட்டு வந்தாங்க, அம்மா வாசல்ல ஓடி போனாங்க பைக்கை விடவும் அம்மா கன்னத்துல ஓங்கி அடிக்கப் போய்ட்டாங்க ஆனா அடிக்கவே இல்லை அப்பா அம்மாவ இது வரை அடிச்சதே இல்லை. ஆனா அம்மா ஓண்ணு அழ ஆரம்பிச்சிட்டா”

என்னால சிரிக்காம எப்படி இருக்க முடியும்?. 

இது எப்பவும் அவங்களுக்குள்ள நடக்குற ஒன்று தான் ஆனால் இருவரும் பேசாமல் இருந்ததில்லை இந்நாள் வரை எத்தனை கடுமையான விவாதங்களின் போதும் அம்மா கோவம் கொண்டாலும் அப்பா எளிதில் அம்மாவை சமாதானம் செய்து விடுவார்.

நான் ஓவியம் கற்றும் கொள்ளலாம் என்ற ஆர்வத்தில் ஒரு மாதம் ஓவிய வகுப்பிற்கு சென்று கொண்டிருந்தேன் நாட்கள் நகர்ந்த வேகம் தெரியவில்லை. ஓரளவிற்கு வெளித்தோற்ற கோடுகள் போடும் அளவு தேர்ச்சிப் பெற்றிருந்தேன் என்றாலும் முழுவதும் கற்றுக் கொள்ள இன்னமும் பல மாதங்கள் ஆகும் அதற்கு முன்பு கல்லூரி இரண்டாம் ஆண்டு துவங்கியது 

அக்கா அருகில் இல்லையென்ற ஒரு வருத்தம் என்னுடனே தான் பயணித்தது. நான் ஒருபோதும் வெளிக் காட்டிக் கொள்வதில்லை. அவள் என்னுடைய அழைப்பை எடுப்பது இல்லை. அவர்கள் வீட்டிற்கு சென்று அவள் எப்படி இருக்கிறாள் என்று அடிக்கடி கேட்டு கொள்வது மட்டுமே வழக்கமாக இருந்தது. 

அவள் உன்னிடம் பேசுவது இல்லையா என்று அவர்கள் கேட்காத படி வாரம் ஒரு முறை சென்று அங்கும் இங்கும் அவர்கள் வீட்டின் உள் சுற்றி காலில் அமர்ந்து இருந்தால் போதும் சில வேலைகளில் நாம் கேட்காமலயே ஆன்டி அவளை பற்றிய கதைகளை அடுக்கிக் கொண்டே இருப்பாள். நான் அவள் மிகவும் சந்தோசமாக இருந்தால் போதும் என்ற மனநிலை தான். அப்படியாகத் தான் அவள் அம்மாவும் கூறுவார்கள் அதனால் எனக்கு அவள் பேசாத போது கூட அவள் சந்தோசமாக இருக்கிறாள் என்ற ஒரு மகிழ்ச்சி.

அவள் அவளுடைய அம்மாவிடம் என்னை விசாரித்தாக அவர்கள் கூறினார்கள். அது எனக்கு அவ்வளவு திருப்பிதி தரவில்லை. எனக்கு ஒரு நாள் போன் செய்திருக்கலாம்! ஆனால் அவள் சென்று மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. சரி என்று என்னை நான் தேற்றிக் கொள்வது அன்றி வேறு நான் என்ன செய்ய முடியும்.

அப்படியாக நாட்கள் போக ஓர் நாள் அவள் வீட்டிற்கு வந்திருப்பதாக அறிந்து அவளை பார்க்க போகலாம் என்று ஓடினேன் வீட்டு வாசல் வரை சென்ற எனக்கு அவள் வீட்டிற்குள் செல்ல விருப்பமில்லை இத்தனை நாட்களில் ஓர் நாள் கூட என்னை அவள் அழைத்துப் பேசவில்லை என்ற ஒரு கோபம் தான் அது.

நான் அப்படியே வீடு திரும்பி விட்டேன். நான் வழக்கம் போல டிவி பார்த்துக் கொண்டிருந்தேன் அம்மா வெளியில் இருந்து வீட்டிற்கு வந்தவள் “உனக்கு ஒன்னும் தெரியாதா என்று கேட்டாள். ?”

அம்மா என்னம்மா சொல்லுற! ஏத பத்தி கேக்குற எனக்கு என்ன தெரியும் என்ற எனது அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு எரிச்சலோடு உனக்கு தெரியாம அவ எதுவும் பண்ண மாட்டாள் சொல்லு இவ்வளவு நாள் அவ உன்கிட்ட என்னலா சொன்னா என்று கோபமாக கேட்க எனக்கு எதுவும் புரியவில்லை.

நான் அம்மாவிடம் கத்தினேன் “அம்மா ஏதாவது புரியுற மாதிரி பேசு, உண்மையாவே நீ யார் பத்தி கேக்குறண்ணு எனக்கு தெரியல என்றேன்.”

அம்மா கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொண்டாள். ரேக்கா வ பத்தி தான் கேட்குறேன் என்றால்! நான் அம்மாவிடம் சொன்னேன் “நீ அவளை பற்றி என்கிட்ட எதுவும் பேச வேண்டாம். அவள் கல்யாணம் முடிந்து போனதிலிருந்து இந்நாள் வரை என்னிடம் ஒரு வார்த்தைக் கூட பேசியது இல்லை, நான் பல நாட்கள் அவளுக்கு போன் செய்தும் அவள் பதில் தரவில்லை. இனி நான் அவளிடம் பேச போவதுமில்லை என்றேன்.”


தொடரும்…..


Comments

Popular posts from this blog

“X” யும் நானும் 😏

அவன் அப்படியென்றும் அழகில்லை

என் மனைவியின் அண்ணி

உங்களுக்கு நடந்த அனுபவங்களை கூறலாம்.

Name

Email *

Message *