உடல் தேவை
என்னுடைய தோழி என்னிடம் வந்து நான் செக்ஸ் பண்ணிட்டேண்டி அவ்வளவு தான் முடிஞ்சுது, நான் இனி விர்ஜின் இல்ல.. ஏதோ ஒரு எண்ணத்தில போய்ட்டேன் இப்போ எல்லாம் முடிஞ்சது டி.. அவன் என்னை கல்யாணம் பண்ணுவேன்னு சொன்னதுனால தான் நான் எல்லாத்துக்கும் சரின்னு சொன்னேன் ஆனா அவன் இப்போ அதுவெல்லாம் பின்னால பார்த்துக்கலாம் என்று சொல்கிறான் என்றாள்.
நான், என்னடி இவ்வளவு அசால்ட்டா சொல்லுற எப்போ டி நடந்துச்சு? எப்படி நடந்துச்சி என்று கேட்டேன் அவள் அழ தொடங்கி விட்டாள். நான் அவளை என்வீட்டின் காலில் இருந்து மாடியில் என்னுடைய அறைக்கு அழைத்துச் சென்று விட்டேன்.
அவள் என்னுடைய கட்டிலில் படுத்துக் கொண்டாள். மவுன தீயொன்று அவளை எரித்துக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். அவளருகில் அமர்ந்தேன். விர்ஜினிட்டி யெல்லாம் பெண்களுக்கு மட்டும் தான் இருக்காடி என்று கேட்டேன் அவளிடம்.
இல்லை ஆனால் மனம் ஒரு பெரிய விளைநிலம் சிறுவயதில் இருந்து உடல் கவனம் பற்றி ஊட்டி வளர்த்து விட்டார்கள். அது இன்று பெரியதொரு ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது அதனாலே தான் என்னால் அதிலிருந்து வெளிவர முடியவில்லை. உணர்வுகளை கட்டுப் படுத்தவும் முடியவில்லை. அவனை நம்பினேன். அவன் தான் எல்லாம் என்று எண்ணினேன். அதானல் என் தயக்கங்கள் வெட்கம் எல்லாம் விட்டு அவனுடன் இருந்தேன். நான் ஒருவனுடன் மட்டுமே என்னுடைய உடலை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று எண்ணியிருந்தேன். அவன் என்னிடம் கூறியதும் அதுவே உன்னுடன் நான் கடைசி வரை இருப்பேன் என்றான்.
அவனை சந்திக்க அனைத்து ஏற்பாடுகளும் நானே செய்தேன். மிகவும் சிரமப் பட்டு அவனை சந்தித்தேன். நான் அவனது மனைவி என்று எண்ணம் கொள்ளச் செய்தான். என்னை கொஞ்சினான் மெச்சினான். என்று அவள் கண்களில் ஓடும் காவிரி நீருக்கு உண்டான வேகத்தில் ஓடும் கண்ணீருடன் கூறிக்கொண்டிருந்தாள்.
என்னுள் அவன் செலுத்த வேதனை பொறுக்காது நான் கத்திய போது தாயை போல பார்த்துக் கொண்டான். என் கன்னித் தன்மை அவன் உறுப்பில் சிவப்பு கம்பளம் விரித்திருந்தது அவன் ஆனந்தப் பட்டான். எனக்கு அந்த நொடியில் ஏதும் புரியவில்லை. நான் உணர்வற்று உணர்வுக்குள் கிடந்தேன். மெல்லியதாய் என்னில் வெளியான மூச்சு மட்டுமே என்னால் உணர முடிந்தது.
உத்தமர்கள் என்ற வேசத்தில் இந்த தேவடியா மகன்கள் எல்லாம் வாழ்கிறார்கள் அடி நிலாவே.. யாரையும் நம்பாதே. எல்லாம் முடிந்து ஒரு வாரங்கள் கடந்து விட்டன. அவன் வேறு ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருப்பதாக என்னிடமே கூறுகிறான்.
என்னை மணம் முடித்து கொள்வதாக கூறினாயே என்றேன். அதற்கு இன்னமும் எத்தனை வருடங்கள் உள்ளன. நீ படித்து முடித்து உனக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்கிறான். அதுமட்டுமல்ல அதுவரை நாம் பேசிக்கொள்ள வேண்டாமென்றான்.
ஆனால் அந்த அறையில் என்னை அவன் வாழ்நாள் முழுவதும் அவனருகிலேயே வேண்டுமென்றான். இவர்களுக்கெல்லாம் தேவை நம்முடைய உடல் மட்டும் தான் டே.
எல்லாம் முடிந்து நான் எழுந்திரிக்க முடியாமல் இருந்த போது வந்து அணைத்துக் கொண்டான். என்னை அறையை ஒட்டியிருந்த ரெஸ்ட் ரூம்க்கு தூக்கிக் கொண்டு சென்றான். மீண்டும் என்னை கட்டிலில் வரை தூக்கிக் கொண்டு வந்தான்.
“நான் ஒன்றை புரிந்து கொண்டேன். இவர்களெல்லாம் நாய்களடி, தேவை வரை பின்னால் முகர்ந்து கொண்டு வருவார்கள்.” அவள் கோபம் தீர பேசிக் கொண்டே இருந்தாள். நான் அவள் முதுகில் சாய்ந்துக் கொண்டேன். என்னுடைய கண்களிலும் கண்ணீர் ஊற்றெடுத்தது. நான் கேள்வி பட்டவரை முக்கால்வாசி ஆண்கள் இப்படித் தான் உள்ளார்கள்.
Comments
Post a Comment