மாடலிங் துறை நண்பன்
எப்போதும் போல தான் அன்று மாலை வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். எதேச்சையாக எனது பள்ளித் தோழனை சந்தித்தேன். கையில் கேமரா உடன் அருகில் ஒரு பெண், அவள் அவனது காதலியாக இருக்கும் என்றே எண்ணினேன். சந்தோஷ் டேய் உன்ன பாத்து எத்தன வருஷம் ஆச்சி ? என்று நானே முதலில் அவனிடம் பேசினேன். அவன் கொஞ்சம் சிந்தித்தவனாய் ஏய் இன்னும் என்ன நியாபகம் வச்சிருக்கியா டி…என்று மிகவும் அன்போடு கேட்டான். சரி இப்போ எங்க, என்ன பண்ணுற கல்யாணம் பண்ணிடியா? எத்தன பசங்க ? வீட்டுக் காரர் என்ன பண்ணுறாரு என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான். டேய்….டேய் கொஞ்சம் பொறு! என்றவளாய் நான் இன்னமும் கல்யாணம் பண்ணிக்கல டா… கொஞ்சம் நாள் ஆகட்டும் என்றேன். அவன் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன் இவ பேரு ஆராதனா என்கூட தான் வேலை பாக்குற இரண்டு மாசதம். நான் ஒரு மாடல் ஏஜென்சி வச்சிருக்கேன் அதில் அவளும் புதிதாக சேர்ந்துள்ளாள் என்றான். சென்னையில சந்திப்பேன்னு நான் நினச்சிக் கூட பார்க்கல… திவ்யா, என்று அப்போது தான் முதல் முறை என் பெயரை உரிமையோடு அழைத்தது போல இருந்தது. நான் ஹாஸ்டெல் லா தான் ஸ்டே பண்ணிருக்கேன் என்றேன். அவன் கொஞ்சம் அட்...